அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது 8-ஆம் வகுப்பு வரை மாற்றுச் சான்று இல்லாமல் வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் சேர்ந்து கொள்ளலாம் என பள்ளிக் கல்வித துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை கடந்த 14 -ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது


கொரோனா தொற்றின் காரணமாக பொதுமக்களிடம் ஒரு வித பாதுகாப்பு உணர்வு இருந்து வருகிறது. அதனால் தனியார் பள்ளிகளில் படித்து வரும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
தனியார் பள்ளிகள் மாற்றுச் சான்று வழங்க தனியார் தனியார் பள்ளிகள் மறுக்கின்றன. மேலும் கடந்த ஆண்டுக்கான கட்டணத்தை செலுத்துவோருக்கு மட்டுமே மாற்றுச் சான்று வழங்கப்படும் என அறிவித்துவிட்டன. கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கடந்த ஆண்டு கட்டணத்தையும் கட்ட முடியாமலும் டிசி வாங்க முடியாமலும் அல்லல்படுகிறார்கள்.
மாணவர்கள் இந்த நிலையில் தனியார் பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்கள் மாற்றுச் சான்று இல்லாமல் அரசுப் பள்ளிகளில் சேர்க்கின்றனர் என்ற குற்றச்சாட்டை தனியார் பள்ளி நிர்வாகிகள் கூறி வருகிறார்கள். இதுகுறித்து பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் கூறுகையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளிகளில் இறுதி வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கும் அந்த பள்ளிகளிலிருந்து வேறு பள்ளிக்கு மாற விரும்பு மாணவர்களுக்கும் மாற்றுச் சான்று கொடுப்பதற்கான அனைத்து விவரங்களையும் கல்வித் தகவல் மேலாண்மை இணையத்தில் அந்த மாணவர்கள் குறித்த விவரங்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

தனியார் பள்ளிகள் அதிலிருந்து மாணவர்களின் மாற்றுச் சான்றை கேட்கும் போது பதிவிறக்கம் செய்து கொடுக்க வேண்டும். கட்டாய கல்வி சட்டத்தின்படி அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்படுவதால் தனியார் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மாற்றுச் சான்று இல்லாமலேயே அரசுப் பள்ளிகளில் அவர்கள் படிக்க வேண்டிய வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம்.
ஆதார் எண் மாணவர் சேர்க்கையின்போது ஆதார் எண்ணை மட்டும் குறிப்பிட்டால் போதும். கல்வி மேலாண்மை தகவல் முகமையில் அந்த எண்ணை பயன்படுத்தி பெற்றுக் கொள்ள முடியும். தனியார் பள்ளிகளில் இருந்து வெளியேறும் மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்த்துவிட்டு, அவர்களின் மாற்றுச் சான்றிதழை அனுப்ப அந்த பள்ளிக்கு கல்வித் தகவல் மேலாண்மை முறைமையின் மூலம வேண்டுகோள் விடுக்கலாம். எனவே அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு வரை மாணவர்களை சேர்க்க மாற்றுச் சான்று ஏதும தேவையில்லை என்றார் ஆணையர்.

Post a Comment

Previous Post Next Post