கணித பாடம் மிகவும் விரும்பக்கூடிய பாடமாக மாறவேண்டும் எனில் அதனுடைய கருத்துக்களை நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கும் முடிவெடுக்க வேண்டிய தருணங்களில் எவ்வாறெல்லாம் கணித கருத்துக்கள் பயன்படுகிறது என்பதையும், மாணவர்கள் அறிந்து கொள்வது மிகவும் அவசியமானதாகும். தான் கற்ற கருத்து தனக்கு உதவியாக அமைகிறது என்ற ஒரு பாதுகாப்பு உணர்வு மாணவர்களிடையே ஏற்படும் போது மட்டுமே கணிதப்பாடம் ஆனது விரும்பி கற்கக்கூடிய பாடமாக அமையும் கணித பாடத்தை நாம் பயிற்சி எடுத்துக் காட்டு தேர்வு என்ற சிறு வரையறைக்குள் நாம் வைத்து விட்டோமே ஆனால் பின்னர் அந்தப் பாடம் தேர்வுக்கான ஒரு பாடமாக அமையும் இல்லாமல் மாணவர்கள் விரும்பி கற்று தமது அறிவை விரிவு படுத்த கூடிய ஒரு சிறந்த பாடம் என்ற உணர்வானது மறக்கப்படுகிறது என்பதுதான்

கணித பாடத்தை கற்க இனிக்கச் செய்யும் வேப்பங்காயாக கசக்கும் செய்வதும் கணித ஆசிரியர்கள் கைகளிலேயே உள்ளது ஏனென்றால் பாட கருத்தை அறிமுகம் செய்வதற்கு முன்னர் அந்தப் பாடகர் இது அன்றாட வாழ்வில் எங்கெல்லாம் வருகிறது அவ்வாறு வரும் பொழுது நாம் கற்க போகின்ற அந்த கணிதப்பாட அறிவானது எவ்வகையில் எல்லாம் அந்த சூழலில் நமக்கு உதவியாகவும் நமக்கு மகிழ்ச்சியையும் தரும் என்ற அறிமுகத்தை ஆசிரியர் வழங்குதல் வேண்டும் கணிதம் என்பது கொடுக்கப்பட்ட எடுத்துக்காட்டு மற்றும் பயிற்சி கணக்குகளுக்கு விடை கண்டுபிடித்து குறிப்பேட்டில் எழுதுவது மட்டுமே என்ற உணர்வையே கணித பாடத்தின் மீது வெறுப்பினை உண்டாக்க வாய்ப்புள்ளது எனில் அதனை எவ்வாறு களைவது என்று நாம் கருத்து அறிமுகத்தை மிகச்சரியாக செய்தபின்னர் தொடர்ச்சியான பல்வேறு சூழல்களை கொடுத்து அவற்றிலெல்லாம் அந்த பாட கருத்துக்கள் எவ்வாறு பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்பதை ஆசிரியரே மாதிரியாக தீர்த்து காண்பித்த பின்னர் மாணவர்களுக்கு சூழல்களை வழங்கி அதற்கான தீர்வுகளை கண்டறியும் படி கூறும்பொழுது கணிதப்பாடம் ஆனது ஆக்கப்பூர்வமாகவும் மாணவர் விரும்பும் வகையிலும் அமைய வாய்ப்புள்ளது கருத்துக்களை அசீம் பிரேம்ஜி பவுண்டேஷன் என்ற நிறுவனத்தினால் மிக சிறப்பாக தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட விளையாட்டு வழி கணிதம் கற்க கூடிய சூழலை மிக அருமையாக தயாரித்து வழங்கி உள்ளார்கள் அதிலிருந்து செயல்பாடு வழியாக கற்பதை காணொளியாக பதிவு செய்து உங்களுக்கு வழங்கி வருகிறோம் உங்கள் பள்ளி குழந்தைகள் மற்றும் உங்களது குழந்தைகளை இவற்றை பார்ப்பதன் வாயிலாக பாடத்தைப் பற்றிய ஒரு தெளிவான அறிமுகம் எளிதில் கிடைத்துவிடும் என நம்புகிறோம் இது ஒரு அணில் முயற்சியே தொடர்ந்து காணொளிகளை கண்டு வந்தால் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்

Post a Comment

أحدث أقدم