பள்ளி மாணவர்கள் மனநிலையை கருத்தில் கொண்டு தற்போது பாடங்களை நடத்த தொடங்குவதற்கு முன் அவர்களுக்கு அனைத்து பாடங்களிலும் அடிப்படை செயல்பாடுகளை அறிமுகப்படுத்தி கற்பிக்க ஏதுவாக நம்முடைய தயாரிப்புகள் இருக்க வேண்டும் . நமது அரசானது முதல் 15 நாட்களுக்கு ஆடல் , பாடல் நிகழ்ச்சிகளை கற்பிக்க சொன்னாலும், நம் வகுப்பில் 4,5 ஆம் வகுப்புகளுக்கு அடிப்படை செயல்பாடுகளை நாம் இணைந்து கற்பிக்க வேண்டிய சூழலில் உள்ளோம். எனவே அதற்காண பாடக்குறிப்பாக தான் நாங்கள் எங்களுக்கு தோன்றிய வகையில் அனைத்து பாடங்களிலும் அடிப்படை கருத்துக்கள் என்னவெல்லாம் சொல்ல முடியுமோ அதனை சேகரித்து அதற்காண பாடக்குறிப்பை தயாரித்து வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும், என நினைக்கின்றோம் . எனவே இதனை பயன்படுத்தி தங்கள் நேரத்தை பயனுள்ள முறையில் மிச்சப்படுத்தி பாடக்குறிப்பை எழுதிட வேண்டுமாய் இதன்மூலம் கேட்டுக்கொள்கின்றோம். நம்முடைய வழக்கமான பாடங்களானது 15 ஆம் தேதிக்குபிறகு ஆரம்பிக்கலாம் எனவே இதனை பயன்படுத்தி இப்பொழுது 15 நாட்களுக்கு பாடத்திட்டத்தை எழுதி வைத்து பின் பாடங்களுக்கான பாடக்குறிப்புகள் வழங்கப்படும் எனவே தொடர்ந்து பாடக்குறிப்புகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.நன்றி.இந்த பதிவு தங்களுக்கு உதவியாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்.
Topic-ஐந்தாம் வகுப்பு சமூக அறிவியல் அடிப்படை செயல்பாடுகளுக்கான பாடக்குறிப்பு (1-15)
File type- PDF
Good
ReplyDeletePost a Comment