தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்த நிலையில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்க முடிவு செய்யப்பட்டு , செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, 9 10 11 12 ஆகிய வகுப்புகளுக்கு முதற்கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில், நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் ஆலோசனையின்படி, 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதே போல், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், பள்ளி செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது, அவர்களிடையே பெரும் மன அழுத்தத்தையும், சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும், இழப்பையும் ஏற்படுத்தி உள்ளதாக, மருத்துவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் தெரிவித்ததைக் கருத்தில் கொண்டு, அனைத்து பள்ளிகளிலும், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல், கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும். அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்ப்படுள்ளதால் ஆசிரியர்கள் பள்ளிகள் திறந்து சில நாட்கள் வரை அடிப்படை செயல்களை நடத்த வேண்டும் என தெரிவித்து உள்ளது. இந்த பதிவில் 4-ம் வகுப்பிற்கான பாடக்குறிப்புகள் இடம் பெறுகிறது. இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Topic- Zeal Study நான்காம் வகுப்பு தமிழ் அடிப்படை மொழித்திறன்கள்- நவம்பர் 2வது வார பாடக்குறிப்பு
File Type-PDF
4th Standard Tamil Lesson Plan

Post a Comment

أحدث أقدم