விபத்துக்கள் நேரிடும் போது உயிரிழப்புகளைத் தடுக்க வாகனங்களில் காற்றுப் பலூன்களை கட்டாயமாக பொருத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கள் நேரிடும் போது உயிரிழப்புகளைத் தடுக்க வாகனங்களில் காற்றுப் பலூன்களை கட்டாயமாக பொருத்த வேண்டும் என மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. வாகனங்களில் ஓட்டுநருக்கு காற்றுப் பலூன் கட்டாயம் என 2017-ம் ஆண்டு வாகனத் தொழில் தரம் 145-ன்படி விதிமுறை விதிக்கப்பட்டிருந்தது. ஓட்டுநருக்கு பக்கத்தில் உள்ள இருக்கையிலும் இந்த காற்றுப் பலூன் அவசியம் என கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் உத்தரவிடப்பட்டிருந்தது.

ஏஐஎஸ் 145, காலத்திற்கேற்றபடி அவ்வப்போது மாற்றம் செய்யப்படும் என்பதற்கு இணங்க இந்த விதிமுறையை கட்டாயமாகக் கடைப்பிடிக்க 2021 டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வெளியிடப்பட்ட புதிய அறிவிக்கையின்படி, 2022 அக்டோபர் ஒன்றாம் தேதிக்குப் பின்னர் தயாரிக்கப்படும் எம்-1 பிரிவு வாகனங்களில் பக்கவாட்டிலும் காற்றுப் பலூன்களை பொருத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பக்கவாட்டில் ஏற்படும் மோதல்களின் போது அந்த பலூன்கள் பயணிகளின் உயிரைப் பாதுகாக்கும். 4 காற்றுப் பைகள் [2 பக்க காற்றுப் பைகள் மற்றும் 2 திரைச்சீலை ஏர்பேக்குகள்] ஆகியவற்றுக்கான தோராயமான மாறி விலை ரூ. 5600 முதல் ரூ. 7000 வரை மாறுபடும். இந்த அறிவிக்கை மீதான கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. அனைத்து கருத்துக்களையும் பரிசீலித்து இந்த விதிமுறை செயல்படுத்தப்பட உள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Also Read: பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள எஸ்.சி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.!

The post “வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு” இதை கட்டாயம் வாகனத்தில் பொருத்த வேண்டும்… இல்லை என்றால்.. மத்திய அரசு தகவல் appeared first on .

Post a Comment

Previous Post Next Post