தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே மாதம் முதல் வாரத்தில் இறுதித் தேர்வு நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே மாதம் முதல் வாரத்தில் இறுதித் தேர்வு நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்த முறை 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உறுதியாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.
அதன்படி, கடந்த மார்ச் 2 ஆம் தேதி 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி 12 ஆம் வகுப்புக்கு மே 5 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறகிறது. அதே போல், 11 ஆம் வகுப்புக்கு மே 9 ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 10 ஆம் வகுப்புக்கு மே 6 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.
இதனிடையே 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி மே 2 ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. அண்மையில் 10 , 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டது. பொதுத்தேர்வு முடிவுகள் 10 ஆம் வகுப்பு ஜூன் 17 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு ஜூன் 23 ஆம் தேதியும்,11 ஆம் வகுப்பு ஜூலை 7 ஆம் தேதியும் வெளியிடப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு மொத்தம் 26,76, 675 பேர் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். அதில் 10 ஆம் வகுப்பில் 9,55,474 பேரும், 11 ஆம் வகுப்பில் 8,83,884 பேரும் 12 ஆம் வகுப்பில் 8,37,317 பேரும் தேர்வு எழுதுகின்றனர். மேலும் பொதுத்தேர்வுவானது ஏற்கனவே குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை மே 13 அம் தேதியோடு வகுப்புகள் முடிகின்றன. அனைத்து வகுப்புகளுக்கும் அடுத்த கல்வியாண்டில் ஜூன் 13ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது. அதேபோல 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 30 நாட்களும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 23 நாட்களும் 12ஆம் வகுப்புக்கு 12 நாட்களும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதனிடையே 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் முதல் வாரத்தில் இறுதி தேர்வு நடத்தபடவுள்ளதாக பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.
அலர்ட்..! 1- 9 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போது..? பள்ளிகல்வித்துறை அறிவிப்பு..
Zeal study posts
0
Comments
Post a Comment