தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து வருகிறது.
அது மட்டுமின்றி கிராமப்புற மாணவர்கள் தங்களுடைய படிப்பினை பாதியிலே விட்டுவிடாமல் தொடர்ந்து கல்வி பயில உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வாறு மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூபாய் 1500, பன்னிரண்டாம் வகுப்பு மாணவருக்கு ரூபாய் 2000 ஊக்கத்தொகை வழங்கப்படும். ஊக்கத்தொகை வழங்க மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை உடனே தர முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
10, 11, 12- வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1500, ரூ.2000.. வெளியான சூப்பர் நியூஸ்.!!!!
Zeal study posts
0
تعليقات
إرسال تعليق