மாணவர்களின் திறனை மேம்படுத்தும்10-ஆம் வகுப்பில் தொழிற்கல்வி பாடத்துக்கு தேர்வு அறிவிப்பு.
இந்தாண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொழிற்கல்வி பாடம் சேர்க்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை கூறுகையில், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வழக்கம் போல் 500 மதிப்பெண்களுக்கே கணக்கீடு செய்யப்படும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தொழிற்கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது அவசியமல்ல.

தொழிற்கல்வி பாடத்தில் பெறும் மதிப்பெண்கள், பொதுத்தேர்வில் மதிப்பெண்ணில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்று தெரிவித்துள்ளது.

மேலும், மாணவர்களின் திறனை மேம்படுத்தும் 10-ஆம் வகுப்பில் தொழிற்கல்வி பாடத்துக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தேசிய கல்வி கொள்கை அடிப்படையில் தொழிற்கல்வி அறிவிக்கப்படவில்லை எனவும் விளக்கமளித்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கையின் எந்த அம்சத்தையும் அரசு இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளது.

இதுவரை பிளஸ் 2 தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு மட்டுமே தொழிற்கல்வி பாடங்கள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு முதல் மற்ற பாடப்பிரிவு மாணவர்களுக்கும் கூடுதலாக தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 10ம் வகுப்புக்கு இதுவரை தொழிற்கல்வி பாடமும் அதற்கான தேர்வும் கிடையாது.

இந்த நிலையில், மாணவர்களின் திறனை மேம்படுத்தும்10-ஆம் வகுப்பில் தொழிற்கல்வி பாடத்துக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தோவு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் நேற்று வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோடை விடுமுறை நாட்கள்

1 -9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 30 நாட்கள் கோடை விடுமுறை விடப்படும்.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 12 நாட்கள் கோடை விடுமுறை

11ஆம் வகுப்பு செல்லவிருக்கும் மாணவர்களுக்கு 23 நாட்கள் கோடை விடுமுறை

Post a Comment

أحدث أقدم