நடப்பு கல்வி ஆண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு ஏப்ரல் மாத இறுதியில் நடத்த பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளால் மூடப்பட்ட பள்ளிகள் கடந்த 1 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத் திட்டங்கள் ஓரளவு முடிக்கப்பட்டு உள்ளதால் முதல் கட்ட திருப்புதல் தேர்வுகள் அண்மையில் தொடங்கின. இந்த தேர்வுகள், முதல் முறையாக அரசு தேர்வுத் துறையின் பொதுவான வினாத்தாள் வழியே, பொதுத் தேர்வுக்கான கட்டுப்பாடுகளுடன் நடத்தப்படுகின்றன.
இந்த தேர்வுகள் வரும் 17 ஆம் தேதி வரை நடைபெறும். இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28 ஆம் தேதி துவங்க உள்ளது. இதுவும் பொதுத் தேர்வு போல ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி வரை நடத்தப்படும். இதற்கிடையில், ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில், பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான செய்முறை தேர்வை நடத்த பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
இதை தொடர்ந்து, நடப்பு கல்வி ஆண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை, ஏப்ரல் இறுதியில் நடத்த பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தியுள்ள பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், அடுத்தகட்டமாக முதல்வருடன் ஆலோசனை நடத்தி, விரைவில் தேர்வு அட்டவணையை வெளியிட முடிவு செய்துள்ளது.
கொரோனா தொற்றால், 2019 - 20 ஆம் கல்வி ஆண்டில் +1, +2 பொதுத் தேர்வுகள் மட்டும் நடந்தன. 10 ஆம் வகுப்பு உட்பட அனைத்து வகுப்பு மாணவர்களும் 'ஆல் பாஸ்' என அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, 2020 - 21 ஆம் கல்வி ஆண்டிலும் கொரோனா மற்றும் சட்டசபை தேர்தல் காரணமாக 1 முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் இன்றி அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான முதல் திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான செய்முறை தேர்வை நடத்த பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு போல இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுவதால், பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் முழுமையாக தயாராக வாய்ப்புள்ளது. எனவே, ஏப்ரல் இறுதி வாரத்தில் 10 ஆம் வகுப்பு மற்றும் +2 பொதுத் தேர்வுகளை நடத்த பள்ளிக் கல்வி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அதன் படி, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 25 ஆம் தேதி துவங்கினால், அனைத்து பாடங்களும் இடைவெளியின்றி தொடர்ச்சியாக நடைபெற வாய்ப்புள்ளது. இதனால், பொதுத் தேர்வு குறித்த அழுத்தம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நீண்ட நாட்கள் நீடிக்காமல் குறைக்க முடியும். மேலும், மே 1-யில் மே தினம், மே 2 அல்லது 3-யில் ரம்ஜான் பண்டிகை என விடுமுறை நாட்கள் வருவதால் அதற்கு முன் தேர்வை முடிக்கவும் பள்ளிக் கல்வி துறை திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து, முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சருடன், பள்ளிக் கல்வித் துறை, தேர்வு துறை அதிகாரிகள் ஆலோசித்து தேர்வு தேதிக்கான அட்டவணையை விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளது.
ஏப்ரல் 25 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு?... ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் பிராக்டிகல் பரீட்சை!
Zeal study posts
0
تعليقات
إرسال تعليق