பொதுத்தேர்வு எழுதும் 10 பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கூடுதல் சலுகைகளைக் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: 10 பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் வகைகளுக்கு ஏற்றவாறு சொல்வதை எழுதுபவர்,கூடுதல் ஒரு மணி நேரம் தேர்வெழுத அனுமதி, தரை தளத்தில்இருந்து எழுத அனுமதி, ஏதேனும் ஒரு மொழிப்பாட விலக்கு, தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு, கிளார்க் அட்டவணை, கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி, கேள்வித்தாளை வாசித்துக் காட்ட அனுமதி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுவருகின்றன.
அதன்படி, மாணவர்களுக்குச் சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் பரிந்துரையின் பேரில் சலுகைகள் வழங்கப்படும். அரசு சார்பாக அனுமதிக்கப்பட்டுள்ள சலுகைகள் மாற்றுத் திறனாளி மாணவர்களால் கோரப்பட்டு, அதனை அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் மற்றும் தலைமை அலுவலகத்தால் நிராகரிக்கப்படுகிறது. அரசு ஆணையின்படி மாணவர்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்து கூடுதல் சலுகைகளையும் வழங்கலாம். அதன்படி, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்புச் சலுகைகள் அடங்கிய திருத்தப்பட்ட பட்டியலைத் தலைமை அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலமாகவும், தபால் மூலமாகவும் உடனே அனுப்பி வைக்க வேண்டும்.
பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் கூடுதல் சலுகைகள் வழங்க அனுமதி
Zeal study posts
0
تعليقات
إرسال تعليق