ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மே 13ஆம் தேதி வரை வேலை நாள் என்பதை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆகியவற்றில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு மே 13ஆம் தேதி வரையில் பள்ளி வேலை நாள்களாகும்.
மேலும், 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரையில் செய்முறைத்தேர்வு நடத்தப்படும்.
6 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையில் தேர்வு நடத்தப்படும். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 30ஆம் தேதி வெளியிடப்படும்.
1 முதல் 5ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு மே 13ஆம் தேதி வரையில் பள்ளிகள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடைக்காலத்தில் பள்ளிகளைத் திறந்து நடத்தினால் மாணவர்களுக்குப் பல்வேறு நோய்த் தொற்று ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும், காேடையில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறியுள்ளதாவது, '1 முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மே 13ஆம் தேதிவரை வேலை நாள் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
கோடைகாலம் அனைத்து சனிக்கிழமைகளிலும் வேலைநாள், எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்கிற நிலையில், மே மாதம் 13ஆம் தேதிவரை பள்ளிகளை நடத்துவது என்பது தேவையற்றது.
மத்திய அரசு பள்ளிகள் அனைத்தும் தற்போது தேர்வுகளை நடத்தத் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஏப்ரல் மாதம் 20ஆம் தேதிக்குள் அனைத்துத் தேர்வுகளும் முடிவுபெறும்.
அதே நடைமுறையைப் பின்பற்றி தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதிக்குள் அனைத்துத் தேர்வுகளை முடித்து மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.
ஏப்ரல் வரை பள்ளி.. மே மாதம் லீவு: பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை!
Zeal study posts
0
تعليقات
إرسال تعليق