தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக "நான் முதல்வன் என்ற திட்டத்தை" தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கடந்த மாதம் அறிமுகப்படுத்திருந்தார்.இத்திட்டத்தின் கீழ்,மொழித் திறமையை மேம்படுத்தவும் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் முதல்வர் கூறியிருந்தார்.
இந்நிலையில்,தமிழகம் முழுவதும் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் இன்று முதல் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் இணைய வழி நேரலை அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன.அதன்படி,12 ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு இன்று மற்றும் ஏப்ரல் 22 ஆகிய தேதிகளிலும், கலை மற்றும் வணிகம் உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு நாளை மற்றும் ஏப்ரல் 23 ஆம் தேதியும் இணைய வழி நேரலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.
இந்த இணைய வழி நேரலை அமர்வுகளில்,12 ஆம் வகுப்பிற்கு பிறகு மாணவர்களின் உயர்கல்வியின் அவசியம் மற்றும் அதன் முக்கியத்துவம்,நுழைவுத் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது போன்ற நுணுக்கங்களை துறை அந்தந்த சார்ந்த வல்லுநர்கள் விளக்கவுள்ளனர்.
இன்று முதல்...இந்த மாணவர்களுக்கு "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் வகுப்புகள்!
Zeal study posts
0
تعليقات
إرسال تعليق