தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நடப்பு ஆண்டில் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயம் தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதற்கான தேர்வு அட்டவணைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதனால் தேர்வுக்கு குறைந்த அளவிலான நாட்கள் மட்டுமே உள்ளதால் பாடத் திட்டங்களை விரைந்து நடத்தி முடிக்க சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தமிழகம் முழுவதும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை அளிப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை பரிசீலனை செய்து வந்தது. இந்நிலையில் வரும் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படும் அல்லது 7:30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை பள்ளிகள் இயங்கும் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் இதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم