தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு பொது தேர்விற்கான ஹால் டிக்கெட் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் நடைபெறவுள்ளது. மேலும் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. கடந்த மார்ச் 2 ஆம் தேதி 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டது. 12 ஆம் வகுப்புக்கு மே 5 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறகிறது. அதே போல், 11 ஆம் வகுப்புக்கு மே 9 ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி வரையும் 10 ஆம் வகுப்புக்கு மே 6 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையும் தேர்வு நடைபெறுகிறது.
இதனிடையே 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி மே 2 ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. பொதுத்தேர்வு முடிவுகள் 10 ஆம் வகுப்பு ஜூன் 17 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு ஜூன் 23 ஆம் தேதியும்,11 ஆம் வகுப்பு ஜூலை 7 ஆம் தேதியும் வெளியிடப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு மொத்தம் 26,76, 675 பேர் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். அதில் 10 ஆம் வகுப்பில் 9,55,474 பேரும், 11 ஆம் வகுப்பில் 8,83,884 பேரும் 12 ஆம் வகுப்பில் 8,37,317 பேரும் தேர்வு எழுதுகின்றனர். மேலும் பொதுத்தேர்வுவானது ஏற்கனவே குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 30 நாட்களும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 23 நாட்களும் 12ஆம் வகுப்புக்கு 12 நாட்களும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதனிடையே 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் முதல் வாரத்தில் இறுதி தேர்வு நடத்தபடவுள்ளதாக பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு பொது தேர்விற்கான ஹால் டிக்கெட் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படுகிறது. அதன்படி பயனர் ஐடி மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று பிற்பகல் 2 மணி முதல் ஹால் டிக்கேட்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாணவர்கள் கவனத்திற்கு..! இன்று ஹால்- டிக்கெட் வெளியீடு.. பதிவிறக்கம் செய்வது எப்படி..? முழு விவரம்..
Zeal study posts
0
تعليقات
إرسال تعليق