சுட்டெரிக்கும் வெயில் மற்றும் கொரோனா அச்சத்தில் இருந்து இப்போது தான் மீண்டு வந்த நிலையில் மாணவர்கள் நலன் கருதி 10, 11 வகுப்பு மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வை அந்தந்த பள்ளியிலேயே நடத்த நடவடக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரக்கை.
சுட்டெரிக்கும் வெயில் மற்றும் கொரோனா அச்சத்தில் இருந்து இப்போது தான் மீண்டு வந்த நிலையில் மாணவர்கள் நலன் கருதி 10, 11 வகுப்பு மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வை அந்தந்த பள்ளியிலேயே நடத்த நடவடக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரக்கை வைத்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வருக்கு அந்த கூட்டமைப்பின் தலைவர் அருணன் வைத்துள்ள கோரிக்கை விவரம்பின்வருமாறு:-
கொரோனா கொடுந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு பல கட்டுபாடுகளை விதித்தன ஒன்றிய மாநில அரசுகள் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இணையவழி மூலமாகவும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலமாகவும் பாடங்கள் எடுக்கப்பட்டது அதே போன்று பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு ஏற்கனவே பள்ளிகளில் நடந்த பருவத் தேர்வுகளின் அடிப்படையில் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சியடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்தார்,
இந்த கல்வி ஆண்டு மாணவர்கள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 1ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது தற்போது கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி வருவதால் சமூக இடைவெளி முக கவசம் கட்டாயம் என மாநில சுகாதாரத்துறை செயலாளர் எச்சரித்துள்ளார் , ஏற்கனவே ஐ.ஐ.டி மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த சூழ்நிலையில் எப்போதும் போல் 3000 மையங்களில் மட்டுமே தேர்வுகள் நடைபெறுமென தேர்வுத்துறை அறிவித்துள்ளது இதனால் ஒரே மையத்தில் பல பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதும் நிலை உள்ளது அதாவது 400 முதல் 600 மாணவர்கள் வரை எழுதும் சூழ்நிலை ஏற்படும் இதனால் சமூக இடைவெளி கேள்விகுறியாகும் , கொரோனாவிற்கு பிறகு அரசு பள்ளி மாணவர்களின் நிலை வெவ்வேறு விதமாக இருக்கிறது அனைவரும் அறிவோம் இந்த சூழலில் 9 , 10 பத்து கிலோ மீட்டர் சென்று தேர்வு எழுதும் போது மன உளைச்சல் ஏற்படும்.
ஏற்கனவே வெயிலின் தாக்க அதிமாக உள்ளது இதனாலும் அவர்கள் பாதிப்பு அடைவார்கள் ஆதலால் ஓய்வறியா மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் , மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் பரிசீலனை செய்து மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே தேர்வு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.
மேலும் மாணவிகள் இடைநிற்றலை போக்க பட்டைய பட்டப்படிப்பிற்கு செல்ல மாதம் ரூ 1000/- அதேபோன்று மாணவர்களுக்கு ஊக்கதொகை அறிவித்து அரசு பள்ளி மாணவர்களின் காவலராக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திகழ்கிறார் என்பதில் எந்த ஐயமும் இல்லை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியையும் பாராட்டுதலையும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post