10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு (TN Board Exam 2022) ஏற்கனவே குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே நடைபெறும் என்றும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே வினாத்தாள்கள் தயாரிக்கப்படும் என்றும் தேர்வுத்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது., "2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே, மேல்நிலை (முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு) இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு, மே 2022-க்கான வினாத்தாள்கள் வழங்கப்படும்.
எனவே, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தினை அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்கி, பாடங்களை விரைந்து முடிக்க அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்ட பள்ளிகள் கடந்த பிப்ரவரி 1 ஆன் தேதி முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகளுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. நடப்பு ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் இந்த ஆண்டு மே மாதம் இறுதி வரை நடைபெறுகிறது. தற்போது, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெற்றுவருகிறது.
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பின்படி, 12 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மே 5 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி முடிவடைகிறது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, மே மாதம் 9 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரையும். 10 ஆம் வகுப்புகளுக்கு மே மாதம் 6 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரையிலும் நடக்க இருக்கிறது. அத்துடன், 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி கடைசி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு; குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி வினாத்தாள் தயாரிக்கப்படும்!
Zeal study posts
0
Comments
Post a Comment