தமிழகத்தில், அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, பள்ளிகள் மீண்டும் மூடப்படுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம், கடந்த ஜனவரி மாத இறுதியில் குறையத் தொடங்கியது. இதை அடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டு அனைத்து வகுப்புகளுக்கும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது பொதுத் தேர்வு முன்னேற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை தீவிரமாக செய்து வருகிறது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, வரும் மே மாதம் 6 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, மே மாதம் 5 ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதை அடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பள்ளிகள் மீண்டும் மூடப்படுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மே மாதம் 13 ஆம் தேதி கடைசி வேலை நாள் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், கொரானா பாதிப்பு அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
إرسال تعليق