10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வில் இடம்பெறாத பாடப்பிரிவுகளுக்கு பள்ளி அளவில் தேர்வு நடத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அறிவுறுத்துள்ளார்.
தமிழகத்தில் மே மாதத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது. பொதுத்தேர்வுக்கான அட்டவணையை மார்ச் 2 ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி அதன்படி 12 ஆம் வகுப்புக்கு மே 5 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில், 11 ஆம் வகுப்புக்கு மே 9 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளது. அதே போல 10 ஆம் வகுப்புக்கு மே 6 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு மொத்தம் 26,76, 675 பேர் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். அதில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4,86,887 பேர், மாணவிகள் 4,68,586 பேர் என மொத்தம் 9,55,474 பேர் எழுதுகின்றனர். 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4,33,684 பேர், மாணவிகள் 4,50,198 பேர் என மொத்தம் 8,83,884 பேர் எழுதுகின்றனர். அதே போல் , 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 3,98,321 பேர், மாணவிகள் 4,38,996 பேர் என மொத்தம் 8,37,317 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
மேலும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி மே 2 ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் 10 , 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. ஆனால் திருப்புதல் தேர்வுகளில் வினாத்தாள் கசிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பொதுத்தேர்வு முடிவுகள் 10 ஆம் வகுப்பு ஜூன் 17 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு ஜூன் 23 ஆம் தேதியும்,11 ஆம் வகுப்பு ஜூலை 7 ஆம் தேதியும் வெளியாகவுள்ளது.
10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுவானது ஏற்கனவே குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே நடைபெறும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 10,11,12 ஆம் வகுப்பு வினாத்தாள்களை வைக்கும் கட்டுப்பாடு மையங்களில் சிசிடிவி கேமிரா பொருத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து காவலர் பணியில் இருக்க வேண்டும். மேலும் இரட்டை பூட்டுக்கொண்டு வினாத்தாள் கட்டுகள் இருக்கும் அறைகள் பூட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். அதன்படி, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வில் இடம்பெறாத பாடப்பிரிவுகளுக்கு பள்ளி அளவில் தேர்வு நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சற்று முன் முக்கிய அறிவிப்பு.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே அலர்ட்.. பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு..
Zeal study posts
0
تعليقات
إرسال تعليق