மொழிக்கு எதிராக போராட்டம் நடத்திய வரலாறு கொண்ட தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையையே அரசு கடைப்பிடித்து வருகிறது.
இதன்படி. 10 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் பள்ளிப் பாடத்தில் தாய் மொழியான தமிழை கட்டாயமாக படிக்க வேண்டும். இரண்டாவது மொழிப்பாடமாக, உலக இணைப்பு மொழியாக உள்ள ஆங்கிலத்தை கற்க வேண்டும் என்ற நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மத்திய அரசு அமல்படுத்த உள்ள புதிய கல்விக் கொள்கையின்படி, மும்மொழி கொள்கை நாடு முழுவதும் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும், இதனை சப்தமின்றி ஏற்றுகொண்டுள்ள திமுக அரசு, ஹிந்தியை பள்ளி மாணவர்களுக்கு மூன்றாவது மொழிப் பாடமாக கொண்டு வர உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த தகவலை பள்ளிக் கல்வித் துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ' தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாணவரும் பத்தாம் வகுப்பு வரை தமிழ்மொழியை கட்டாயம் கற்க வேண்டும் என்ற உத்தரவு 2006 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. எனவே தமிழ்நாட்டில் இதுநாள்வரை நடைமுறையில் உள்ள இருமொழிக் கொள்கையே தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
அதேசமயம் கன்னடம், தெலுங்கு, மலையாளம், உருது என தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத மாணவர்களுக்கு தமிழ் மொழியுடன் சேர்த்து அவர்களின் தாய் மொழியையும் விருப்பப்பாடமாக தேர்வு செய்து படிக்கும் வழிமுறை தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்று பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தெளிவுபடுத்தியுள்ளார்.
Post a Comment