இந்த உதவித்தொகைக்கு மாணவர்களின் பெற்றோரின் சம்பளம் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க
வேண்டும்.
தேசிய தேர்வு முகமை (NTA) மே 7, 2022 அன்று SHRESHTA (NETS)-க்கான தேசிய நுழைவுத் தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வு குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கான ரெசிடென்ஷியல் எடுகேஷன் (SHRESHTA) திட்டத்தின் கீழ் நடத்தப்படும். ஒதுக்கப்பட்ட பிரிவை சார்ந்த மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பலன் பெறுவார்கள். இந்த திட்டம் 2022-23 கல்வியாண்டில் இருந்து தொடங்கப்படுகிறது. SHRESHTA திட்டமானது, 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கல்விச் செலவுகள் அனைத்தையும் உள்ளடக்கிய உதவித்தொகைகளை வழங்குகிறது. அதன் அறிவிப்பை cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம்.
அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் SHRESHTA-வுக்கான தேர்வு நடத்தப்படும். 12 ஆம் வகுப்பு வரையிலான சிபிஎஸ்இ உடன் இணைக்கப்பட்டுள்ள ரெசிடென்ஷியல் பள்ளிகளுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை பொருந்தும். இந்த சலுகையை பெற பள்ளிகள் கடந்த 3 ஆண்டுகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் 75% அல்லது அதற்கு மேற்பட்ட தேர்ச்சி சதவீதத்துடன் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.

CBSE வெளியிட்ட முந்தைய அறிக்கையில், இந்த திட்டமானது பட்டியலிடப்பட்ட மாணவர்களை சேர்க்கும் பள்ளிகளுக்கு நேரடியாக உதவித்தொகை விநியோகத்தை உள்ளடக்கியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகை பள்ளிக் கட்டணம் (கல்வி கட்டணம் போன்றவை) மற்றும் விடுதிக் கட்டணம் (மெஸ் கட்டணம் போன்றவை உட்பட) ஆகியவற்றை உள்ளடக்கியதாக CBSE மேலும் கூறியது.

SHRESTHA தேர்வு என்றால் என்ன?

SHRESHTA (NETS) என்பது கணினி அடிப்படையிலான (CBT) முறையில் நடத்தப்படும் தேசிய அளவிலான தேர்வாகும். இந்த நுழைவுத் தேர்வு மே 7, 2022 அன்று நடைபெறும். இந்த தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மீடியம் மாணவர்களுக்கு நடத்தப்படும். SHRESHTA நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் CBSE இணைந்த பள்ளிகளில் சேர்க்கைக்கான பட்டியலிடப்பட்டுள்ளனர்.

யார் விண்ணப்பிக்கலாம்?

நடப்பு கல்வியாண்டில் (2021-22) 8 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வுக்கு தகுதி பெறுவார்கள். மேலும், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் வரை தகுதிக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்.

Post a Comment

أحدث أقدم