மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) இரண்டாம் கட்ட பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் நேரடி முறையில் தொடங்கும் என்று அறிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றுச் சூழல் காரணமாக சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த 2020ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டன.
அந்த வகையில் இந்தாண்டும், எதிர்பாராத சூழல் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக, இரு பருவப் பொதுத் தேர்வு என்ற முறையை சிபிஎஸ்இ அறிவித்தது.
அதன்படி, முதல் கட்ட பொதுத் தேர்வு கடந்த நவம்பர்- டிசம்பர் மாதத்தில் நடைபெற்றது. இதன் முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து 2ஆம் கட்ட பொதுத் தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து சிபிஎஸ்இ ஆலோசனை மேற்கொண்டது. சிபிஎஸ்இ மாணவர்களும் பெற்றோர்களும் இதனை எதிர்பார்த்து இருந்தனர்.
இந்தநிலையில், தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதை சிபிஎஸ்இ கணக்கில் கொண்டது.
இதனையடுத்து 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
இந்த தேர்வு நேரடி முறையில் (Offline exam) நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணை மிக விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது
Post a Comment