புதிய கல்விக் கொள்கைக்கான பயிற்சி வகுப்புகளை நடத்த சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பாரதியார் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. 
மாநில கல்விக் கொள்கையை உருவாக்க வல்லுநர் குழுவை தமிழ்நாடு அரசு நியமித்துள்ள நிலையில் யுஜிசி இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு ஏற்கனவே அறிமுகப்படுத்திய புதிய கல்விக் கொள்கை நாடு முழுவதும் வரும் கல்வியாண்டில் அமலுக்கு வர உள்ளது. இது குறித்த அறிக்கைகளை பல்கலைக்கழக மானியக் குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாநில அரசு பல்கலைக்கழகங்களிலும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் மாநில கல்விக் கொள்கையை உருவாக்க வல்லுநர் குழுவை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.

இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும் என தமிழகத்தில் உள்ள 4 பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., தமிழகத்தில் உள்ள 4 பல்கலைக் கழகங்கள் உள்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்த புதிய கல்விக் கொள்கை தொடர்பான பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைகழகம் ஆகிய நான்கு பல்கலைக்கழகங்களிலும், புதிய கல்விக் கொள்கை அமல்படுத்துவதற்கு தேவையான பயிற்சியை தொடங்க உத்தரவிட்டுள்ளது.

மேலும், இது தொடர்பான பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும், எந்தெந்த பாடப்பிரிவுகள் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட உள்ளது. அதற்கான செயல்பாடுகள் என்னென்ன என்பது குறித்து அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு பல்கலைக்கழகங்கள் விரிவாக பயிற்சி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழு (UGC), ஒரே நேரத்தில் இரண்டு முழு நேர படிப்புகளை ஆஃப்லைன், ஆன்லைன் அல்லது தொலைதூரத்தில் படிக்கலாம் என சமீபத்தில் அறிவித்தது. இதற்கான வழிகாட்டுதல் அறிவிப்பை UGC கடந்த புதன்கிழமை (13 ஏப்ரல் 2022) அன்று வெளியிட்டுள்ளது.

இது குறித்து பேசிய யுஜிசி தலைவர் எம் ஜெகதேஷ் குமார்., மாணவர்கள் ஒரே பல்கலைக்கழகத்திலோ அல்லது வெவ்வேறு கல்லூரி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் இரண்டு முழுநேர மற்றும் அதற்கு சமமான பட்டப் படிப்புகளை நேரடியாக படிக்க அனுமதி வழங்க ஆணையம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும், இந்த வழிகாட்டுதலால் எந்த விரையமும் மாணவர்களுக்கு இருக்காது என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

أحدث أقدم