கர்நாடகாவில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது.
கொரோனா காரணமாக கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாமல் ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.


இதனால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் சரிவர கல்வி கற்க முடியாத சூழல் ஏற்பட்டது . தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையில், மாணவர்களின் கல்வித் திறனை அதிகரிக்கும் வகையில், 2022 -23ம் ஆண்டில் பள்ளிகளை முன்கூட்டியே திறக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு வந்தது.

அதன்படி கர்நாடகாவில் இன்று ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிகள் திறப்பை ஒட்டி மாநிலம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் தூய்மை பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. பள்ளி திறக்கும் முதல் நாள் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஆசிரியர்கள் தயாராகி உள்ளனர். மாநிலம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்படுவதையொட்டி துமகூரு மாவட்டத்தில் எம்பிரஸ் பப்ளிக் பள்ளிக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை மதியம் சென்று மாணவர்களை சந்திக்கிறார். பின்னர் 2022 -23ம் கல்வியாண்டுக்கான பள்ளியை அவர் திறந்து வைக்கிறார். அத்துடன் அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அவர் மாணவ -மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் ,சீருடைகளை வழங்குகிறார்

Post a Comment

أحدث أقدم