பிளஸ் 1 மாணவர்களுக்கு நேற்று பொது தேர்வு துவங்கியது. முதல் நாளான நேற்று, தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வுகள் நடந்தன. இந்த தேர்வில், தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த, 8.85 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், 43 ஆயிரத்து, 533 பேர் நேற்றைய தேர்வுக்கு வராமல், 'ஆப்சென்ட்' ஆகினர். அவர்களின் விபரங்கள் குறித்து, மாவட்ட வாரியாக பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள், கடந்த ஆண்டு, 10ம் வகுப்பில் கொரோனா காரணமாக பொது தேர்வு இல்லாமல், 'ஆல் பாஸ்' ஆனவர்கள்.இதற்கிடையில், முதல் நாள் தேர்வில் 'காப்பி' அடித்ததாக, சேலம் மற்றும் திருச்சி மாவட்டத்தில் தலா ஒரு மாணவர் பிடிபட்டுள்ளதாக, அரசு தேர்வு துறை தெரிவித்துள்ளது.
சென்னை : பிளஸ் 1 தேர்வில், முதல் நாளான நேற்று, 43 ஆயிரம் பேர், 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர்.பிளஸ் 1 மாணவர்களுக்கு நேற்று பொது தேர்வு துவங்கியது. முதல் நாளான நேற்று, தமிழ் உள்ளிட்ட மொழி
إرسال تعليق