1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று தேர்வுகள் முடிவடைகிறது.
இதனால் நாளை முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. மாற்றுப்பணியில் உள்ள ஆசிரியர்களை நாளைய தினமே விடுவிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. மேலும் கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் குறைபாடுகளை ஈடுசெய்வதற்காகத் தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி மாணவர்களுக்கு மாலை 5.00 மணிமுதல் 7.00 மணிக்குள் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையிலும் இடைநிற்றலை முற்றிலும் களைவதற்கும் ஏற்றவகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோடை காலம் என்பதால் இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு நாளை முதல் 31 வரை கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விரும்பும் மாணவர்களுக்கு தொடர்ந்து வகுப்புகளை நடத்த தடையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.


அதே போல தமிழ்நாட்டில் பொது நுழைவுத் தேர்வுக்கான (டான்செட் 2022) விண்ணப்பங்கள் மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 18 ஆம் தேதி வரையில் பெறப்பட்டன. எம்.பி.ஏ படிப்பிற்கு 21,557 பேரும், எம்.சி.ஏ படிப்பிற்கு 8,391 பேரும், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்பிற்கு 6,762 பேரும் என 36,710 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களுக்கு தேர்வுக்கான நுழைவுச்சீட்டு மே 2 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. எம்.சி.ஏ படிப்பிற்கு நாளை காலை 10 மணி முதல் 12 மணி வரையும், எம்.பி.ஏ படிப்பிற்கு நாளை மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்பிற்கு மே 15-ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரையும் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.

இவர்களுக்கான தேர்வு சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி உள்ளிட்ட 15 நகரங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்விற்கான முடிவுகள் ஜூன் 10-ம் தேதிக்கு முன்னர் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் நாளை நடைபெறும் தேர்வினை முன்னிட்டு அனைத்து கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் விடுமுறை அறிவித்துள்ளார்.

இவர்களுக்கான தேர்வு சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி உள்ளிட்ட 15 நகரங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்விற்கான முடிவுகள் ஜூன் 10 ஆம் தேதிக்கு முன்னர் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் மே 14 ஆம் தேதி நடைபெறும் தேர்வினை முன்னிட்டு அனைத்து கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் விடுமுறை அறிவித்துள்ளார்.


Post a Comment

أحدث أقدم