கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்ததால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.
இதனையடுத்து தற்போது 10, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு மே 14-ஆம் தேதி முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் பள்ளிகளுக்கு பெரும்பாலான மாணவர்கள் காலை உணவை சாப்பிடாமல் வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தடுக்கும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் இது தொடர்பான அறிவிப்பை தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார். அதன்படி அனைத்து மாணவர்களும் பள்ளி நாட்களில் காலையில் சத்தான உணவை சாப்பிடுவதற்காக சிற்றுண்டி வழங்கப்படும். இந்த திட்டத்தை முதற்கட்டமாக ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் செயல்படுத்த உள்ளது. அதனால் பள்ளியில் மாணவர்கள் காலையில் சிற்றுண்டி சாப்பிட ஏதுவாக பள்ளி வேலை நேரம் மாற்ற பள்ளிக்கல்வித்துறையால் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் ஜூன் 13ஆம் தேதி தொடங்கப்படும் போது இந்த வேலை நேரம் மாற்றம் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.
إرسال تعليق