கோடை காலம் தொடங்கி விட்டதால் வெயிலின் தாக்கம் உச்சம் தொட்டு உள்ளது. இதனால் சில மாநிலங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சி.பி.எஸ்.இ 1 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

நடப்பு கல்வி ஆண்டில் கொரோனா காரணமாக பள்ளி வகுப்புகள் முழுமையாக நடைபெறாத நிலையில், இறுதித் தேர்வுகள் மே மாதம் இறுதி வரை நடத்தப்படுகின்றன. இந்நிலையில் ஓயாத வெப்பத்தின் காரணமாக, பல மாநிலங்கள் பள்ளி நேரத்தில் மாற்றங்களைச் செய்துள்ளன. அதே நேரத்தில் பல மாநிலங்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கோடை விடுமுறையை முன்கூட்டியே அறிவித்துள்ளன. பஞ்சாப் அரசு மே 14, 2022 முதல் மாநிலம் முழுவதும் கோடை விடுமுறையை அறிவித்துள்ளது. இதை அடுத்து ஆந்திரப் பிரதேச பள்ளி மாணவர்கள் தங்கள் விடுமுறையை மே 6, 2022 இல் தொடங்கினார் மற்றும் மேற்கு வங்க பள்ளிகளின் கோடை விடுமுறைகள் மே 2 இல் தொடங்கியது.

மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) வெளியிட்ட அறிக்கையின் படி, சி.பி.எஸ்.இ 12ம் வகுப்புக்கான 2ம் பருவத்தேர்வு, ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி ஜூன் 15 வரை நடைபெறும். மேலும் சி.பி.எஸ்.இ 10ம் வகுப்புக்கான 2ம் பருவத் தேர்வு, ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி மே 24ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தேர்வுகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சி.பி.எஸ்.இ 1 - 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு, கோடை விடுமுறை ஜூன் 1, 2022 முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா தொற்று நோயால் மாணவர்களுக்கு கற்றல் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதை ஈடு செய்ய டெல்லி பள்ளி கோடை விடுமுறையை ஜூன் 18, 2022 வரை டெல்லி அரசு ஒத்திவைத்துள்ளது. டெல்லி பள்ளிகளில் கோடை வகுப்புகள் நடத்தப்படும் என்று டெல்லி கல்வி இயக்குநரகம் (DoE) அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் டெல்லியில் அதிகரித்து வரும் வெப்பத்தால் பள்ளி மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் என பெற்றோர்களும், ஆசிரியர்களும் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் பள்ளி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post