சென்னை-பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ - மாணவியருக்கு செய்முறை தேர்வுகள் முடிந்து, இன்றுடன் வகுப்புகள் நிறைவு பெறுகின்றன.
தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் படிக்கும், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும் 5ம் தேதி முதல் பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன. பிளஸ் 2வுக்கு மே 5; 10ம் வகுப்புக்கு மே 6; பிளஸ் 1க்கு மே 10ல் பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன.
இந்த மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறை தேர்வுகள், ஏப்ரல் 25ல் துவங்கின; செய்முறை தேர்வுகள் இன்றுடன் முடிகின்றன. இதையடுத்து, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, வகுப்புகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றன.அரசு பள்ளிகளை பொறுத்தவரை, மாணவர்கள் தேர்வுக்கு வரும் போது, 'ஹால் டிக்கெட்'டை மறந்து விட்டு வந்து, பதற்றமாவதை தவிர்க்க, அவர்களின் ஹால் டிக்கெட்டுகளை தேர்வு மையத்தில் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது.
தனியார் பள்ளிகள் சிலவற்றில், மாணவர்களிடம் ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில், மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான அறிவுரைகள் இன்று வழங்கப்படும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
சென்னை-பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ - மாணவியருக்கு செய்முறை தேர்வுகள் முடிந்து, இன்றுடன் வகுப்புகள் நிறைவு பெறுகின்றன.தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் படிக்கும்,
சமரசத்துக்கு இடமளிக்காமல். அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்.
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,'ஆட்பிளாக்கர்' உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், 'ஸ்கிரீன் ஷாட்' எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
إرسال تعليق