தமிழகத்தில் கொரோனா பேட்சில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, பிளஸ் 1 சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கின் காரணமாக, 10-ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்த தமிழக அரசு, 2021 ஜூலை 26ஆம் நாள் அரசாணையானது, மதிப்பெண்கள் வழங்காமல் மாணவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் வழங்கும்படி பிறப்பித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்த நக்‌ஷத்திரா பிந்த் என்ற மாணவி, கேரளா பள்ளியில் 11-ஆம் வகுப்பு சேருவதற்கு மதிப்பெண் சான்று தேவைப்படுவதால், தனக்கு சான்றிதழ் வழங்கக் கோரியும், மதிப்பெண் வழங்காமல் தேர்ச்சி சான்று வழங்க வகை செய்யும் அரசாணையை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும் இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வானது, தமிழ்நாடு அரசு மட்டுமல்லாமல், பல மாநிலங்கள் தேர்வு நடத்தாததால், மதிப்பெண்கள் வழங்காமல் தேர்ச்சி சான்றிதழ் வழங்கியுள்ளதாக உள்ளது எனவும் அரசின் கொள்கை முடிவில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனச் சுட்டிக்காட்டியது. மேலும், தேர்வு நடத்தாமல் மதிப்பெண் சான்றிதழ் வழங்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Post a Comment

Previous Post Next Post