வங்கக்கடலில் தீவிர புயலாக நிலை கொண்டிருந்த அசானி,தற்போது புயலாக வலுவிழந்துள்ளது ஆந்திராவின் மசிலிப்பட்டணத்திற்கு தென்கிழக்கே 90 கிமீ தொலைவில் நிலவுகிறது எனவும்,இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு மத்திய வங்காள விரிகுடாவை ஆந்திர கடற்கரைக்கு அருகில் இன்று காலை 11 மணிக்கு அடைந்து,பின்னர் திசை மாறி ஒடிசா கடலோரத்தை நோக்கி நகர்ந்து நாளை காலைக்குள் அசானி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால்,வடக்கு ஆந்திரா மாவட்டங்களில் எனவும், 150 கிமீ வரை காற்று வீசக்கூடும்,கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக,ஆந்திராவில் இன்று கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால்,பல பகுதிகளுக்கு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில்,அசானி புயல் காரணமாக இன்று நடைபெறவிருந்த 11 மற்றும் 12 ஆம் வகுப்பு இன்டர் 1 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என ஆந்திரப் பிரதேச இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது.மேலும், ஒத்திவைக்கப்பட்ட தேர்வு மே 25 ஆம் தேதி அன்று நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதே சமயம்,நாளை(மே 12, 2022) முதல் மற்ற அனைத்து தேர்வுகளும் ஏற்கனவே குறித்த அட்டவணைப்படி நடைபெறும் எனவும்,அதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






Post a Comment

Previous Post Next Post