தமிழகத்தில் ஜூன் 13-ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளை திறக்க ஆசிரியர் கூட்டமை கோரிக்கை வைத்துள்ளது.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில்; 'தமிழக அரசு ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆனால் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு பணிகள் நிறைவடையாத நிலையிலும், மே 31 -ம் தேதி தேர்வுகள் முடிந்தாலும், ஜூன் மாதம் 10 முதல் 12-ம் தேதி வரையிலும் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறலாம் என்பதால் பள்ளி திறப்பதை சற்று தாமதப்படுத்தி ஜூன் மாதம் 20 அல்லது 27-ம் தேதி இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.

இது மிகவும் வரவேற்கத்தக்க நிகழ்வாக இருந்தாலும் ஏற்கெனவே ஜூன் மாதம் 13-ம் தேதி முதல் விடுப்பு அளிக்கப்பட்டு 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் வீடுகளில் உள்ளனர். தொடக்கநிலை ஆசிரியர்களும் 20-ம் தேதி முதல் விடுப்பில் செல்ல இருக்கின்றனர். அரசு இதனை மனதில் வைத்து 1-9 வகுப்புகளை ஜூன் 13-ம் தேதி முதல் அதாவது ஜூன் மாதம் திறந்து மாணவர்களுக்கு எழுத்து அறிவிப்பது மிகவும் சிறப்பாக இருக்கும். உயர் வகுப்புகளை அரசு அறிவித்துள்ளபடி ஜூன் 20 அல்லது 27-ம் தேதி திறக்கலாம் எனவும், அரசு இதனை செயல்படுத்த வேண்டும் என்பதே பெரும்பாலான கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

ஏற்கெனவே சனிக்கிழமைகளில் இந்த கல்வி ஆண்டு முழுவதும் வேலை செய்த மனநிலையில்தான் பெரும்பாலான ஆசிரியர்கள் இருக்கின்றனர். அதை இந்த ஆண்டும் தொடர வேண்டாம். ஏற்கெனவே அறிவித்தபடி 1-9 வகுப்புகளை ஜூன் 13-ம் தேதி திறக்கப்பட்டால் கல்விப் பணியில் தொய்வு இல்லாமல் சிறப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Post a Comment

أحدث أقدم