நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டும், மோட்டார் வாகன சட்டம் மற்றும் உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறைகளை தீவிரமாக அமல்படுத்த நோக்கத்திலும் ஒவ்வொரு வருடமும் கல்வி நிறுவனங்களில் வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.
அவ்வகையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை ஆய்வு செய்ய போக்குவரத்து துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி அதற்கான பணி தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
இதையடுத்து அந்த ஆய்வு பணியை அமைச்சர் சந்திர பிரியங்கா பார்வையிட்டு,ஆய்வில் தரம் உறுதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு பரிசோதனை சான்றிதழை வாகனத்தில் ஒட்டினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,மாவட்டத்தில் முதல் நாள் ஆய்வில் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் 32 ஆய்வு செய்யப்பட்டன. அந்த ஆய்வு மாணவர்கள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்வதற்காக செய்யப்பட்டது.
கல்வி நிறுவனங்களும் மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருதி வாகனங்களை உரிய முறையில் பராமரிக்க வேண்டும். மேலும் புதுவையில் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் போதே மாணவர்களுக்கான ஒரு ரூபாய் கட்டணம் பேருந்து இயக்குவதற்கான உரிய நடவடிக்கையை கல்வித்துறை அமைச்சர் எடுத்து வருகிறார் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
إرسال تعليق