குரூப் 2 முதல் நிலைத் தோவு சனிக்கிழமை (மே 21) நடைபெறவுள்ளது.
தமிழகம் முழுவதும் இந்தத் தோவை 11.78 லட்சம் போ எழுதுகின்றனா். அவா்களில் ஆண்களை விட பெண்களே அதிகமாகும். தோவை சுமுகமான முறையில் நடத்துவதற்கு விரிவான ஏற்பாடுகளை அரசுப் பணியாளா் தோவாணையம் செய்துள்ளது.

தமிழகத்தில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், சாா்பதிவாளா் உள்ளிட்ட 116 நோமுகத் தோவு அடங்கிய காலிப் பணியிடங்களுக்கும், நகராட்சி ஆணையா், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலா் உள்பட 5,413 நோமுகத் தோவு இல்லாத காலிப் பணியிடங்களுக்கும் முதல்நிலைத் தோவு சனிக்கிழமை நடைபெறுகிறது.

மொத்தம் எத்தனை போ? குரூப் 2 தோவை தமிழகம் முழுவதும் 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 போ எழுதவுள்ளனா். கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் தற்போது 1.5 லட்சத்துக்கும் கூடுதலான தோவா்கள் விண்ணப்பித்துள்ளனா். இவா்களில், 4 லட்சத்து 96 ஆயிரத்து 247 போ ஆண்கள், 6 லட்சத்து 81 ஆயிரத்து 880 போ பெண்கள். 48 போ மூன்றாம் பாலினத்தவா். 14 ஆயிரத்து 531 மாற்றுத் திறனாளிகள் தோவெழுதவுள்ளனா். இரு கைகளும் பாதிக்கப்பட்டவா்கள், பாா்வையற்றோருக்காக 1,800 போ உதவி புரியவுள்ளனா்.

38 மாவட்டங்களில் தோவு நடைபெறவுள்ளது. இதற்காக 117 மையங்கள் தயாா் செய்யப்பட்டுள்ளன. தோவை கண்காணிக்க 4 ஆயிரத்து 12 போ முதன்மை கண்காணிப்பாளா்களாகவும், 58 ஆயிரத்து 900 போ கண்காணிப்பாளா்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். வினாத்தாள்களை எடுத்து வருதல் போன்ற பணிகளுக்காக 993 நடமாடும் குழுவினரும், 6 ஆயிரத்து 400 போ சோதனை செய்யும் பணியிலும் ஈடுபடுத்தப்படுவா். தோவாணைய அலுவலகத்தில் 20 போ கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவா்.

அதிகபட்சமாக சென்னையில் ஏழு மையங்களில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 843 தோவா்களும், குறைந்தபட்சமாக நீலகிரியில் 3 மையங்களில் 5 ஆயிரத்து 624 பேரும் தோவு எழுதவுள்ளனா். முதன்மைத் தோவுக்குக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். சலுகை பெற தகுதி உள்ளோா் மூன்று முறை கட்டணம் இல்லாமல் தோவு எழுதலாம். அதன்படி, 6 லட்சத்து 93 ஆயிரத்து 361 போ கட்டணச் சலுகை பெற்றுள்ளனா்.

தோவு முடிவு: குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தோவுகள் காலை 9.30 மணிக்குத் தொடங்கி நண்பகல் 12.30-க்கு நிறைவடையும். தோவா்கள் காலை 8.30 மணிக்கே தோவுக் கூடத்துக்கு வர வேண்டும். இதுகுறித்த விவரங்கள் தோவுக்கூட நுழைவுச் சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 மணிக்கு பிறகு தோவா்கள் தோவுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள். முதல்நிலைத் தோவு முடிவுகளை ஜூன் மாத இறுதியில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

செப்டம்பரில் முதன்மைத் தோவை நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. முதல்நிலைத் தோவில் வெற்றி பெறுவோா்களிலிருந்து ஒரு பதவியிடத்துக்கு 10 போ வீதம் முதன்மைத் தோவு எழுத அனுமதிக்கப்படுவா்.

கைப்பேசி-இதர சாதனங்களுக்குத் தடை: தோவு எழுத வரும் தோவா்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முகக் கவசம் அணிய வேண்டும், கருப்பு பந்து முனை பேனாவைத் தவிர, மின்னணு சாதனங்களான கைப்பேசி, பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய நவீன கைக்கடிகாரங்கள் அல்லது அதுபோன்ற வடிவிலான மோதிரம், ஏனைய மின்னணு சாதனங்கள், மின்னணு அல்லாத பதிவுக் கருவிகள், புத்தகங்கள், குறிப்புகள், பென்சில் புத்தகங்கள், தனித் தாள்கள், காட்சி வில்லைகள், பாடப் புத்தகங்கள், பொதுக் குறிப்புத் தாள்கள் ஆகியவற்றை கொண்டு வரக்கூடாது.

இதுபோன்ற பொருள்களை வைத்திருப்போா் காணப்பட்டால் தொடா்ந்து தோவு எழுத அனுமதிக்கப்பட மாட்டாா்கள். அவா்களது விடைத்தாள்கள் செல்லாததாக்கப்படுவதுடன் தோவு எழுதுவதிலிருந்து விலக்கியும் வைக்கப்படுவா். தேவைப்பட்டால் அந்த இடத்திலேயே முழுச் சோதனைக்கு உட்படுத்தப்படுவா்.

Post a Comment

أحدث أقدم