கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்ற பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் பள்ளிகள் திறக்கப்பட்டு நடப்பு கல்வி ஆண்டில் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து தற்போது ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு இன்றோடு முடிவடைகிறது.
இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணியில் இருப்பதால் மே 20ஆம் தேதி வரை பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இருப்பினும் மே 20ஆம் தேதிக்கு முன்னதாகவே பணிகளை முடிக்கும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை என்றும், வெளிநாடு செல்வதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு எந்தவித தடையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
Post a Comment