வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அரசு துறைகளில் குரூப் 2, 2ஏ பணிகளில் 5529 இடங்களை நிரப்ப அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. சார்பில் வரும் 21ம் தேதி முதல் நிலை தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.
இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தேர்வர்கள் தங்களது விபரங்கள் அடங்கிய பிரத்யேக விடைத்தாளை மட்டுமே பயன் படுத்த வேண்டும். எனவே விடைத்தாள் பெற்றதும் அதில் உள்ள தங்களின் விபரங்களை சரிபார்த்த பின்பே பயன்படுத்த வேண்டும். தவறாக இருந்தால் பயன்படுத்தும் முன்பே மாற்றி கொள்ள வேண்டும்
தேர்வர்கள் அவர்களுக்கான விடைத்தாளுக்கு பதிலாக வேறு விடைத்தாள் பெற்று அதில் தங்களின் பதிவு எண்ணை தவறாக எழுதியிருந்தால் தேர்வரின் மொத்த மதிப்பெண்ணில் இரண்டு மதிப்பெண் கழிக்கப்படும்
மொத்த கேள்விகளுக்குமான விடைக்குறிப்பை 'ஷேடிங்' செய்வதில் சரியான முறையை பின்பற்றாவிட்டால் இரண்டு மதிப்பெண் கழிக்கப்படும்
வினா தொகுப்பு புத்தகத்தின் எண்ணை சரியாக குறிப்பிடாமலும் விடைத்தாளில் அதற்கான இடத்தில் சரியாக எழுதாமலும் இருந்தால் ஐந்து மதிப்பெண் கழிக்கப்படும்
ரேகை வைக்க முடியாத மாற்று திறனாளிகள் தவிர மற்றவர்கள் தேவைப்படும் இடத்தில் விரல்ரேகை வைக்க வேண்டும். ரேகை வைக்காவிட்டால் இரண்டு மதிப்பெண் கழிக்கப்படும்
எந்த கேள்விக்காவது விடைக் குறிப்பை தேர்வு செய்யாமல் காலியாக விட்டால் 2 மதிப்பெண் கழிக்கப்படும். தேர்வர்கள் கவனமாக விடைத்தாளை கையாள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை: குரூப் 2 தேர்வில் 'மைனஸ்' மதிப்பெண் முறை உண்டு என அறிவிக்கப்பட்டு உள்ளது.அரசு துறைகளில் குரூப் 2, 2ஏ பணிகளில் 5529 இடங்களை நிரப்ப அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.
சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,'ஆட்பிளாக்கர்' உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், 'ஸ்கிரீன் ஷாட்' எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
Post a Comment