தமிழகத்தில் திட்டமிட்டப்படி மே 21ம் தேதி குரூப் 2 முதல்நிலை தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி முகக் கவசம் அணிந்துவந்தால் நல்லது என்றும் முகக் கவசம் அணியாத தேர்வர்களை அனுமதிக்கூடாது என எவ்வித அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என அவர் விளக்கமளித்தார்.

116 நேர்முகத் தேர்வு பணியிடம், 5 ஆயிரத்து 413 நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடங்களுக்கும் என மொத்தம் 5,529 பணியிடங்களுக்கு வரும் 21ம் தேதி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு நடைபெற உள்ளது. இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்தர், தேர்வுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக கூறினார்.

தேர்வு அன்று காலை 8.30 மணிக்கு தேர்வர்கள் வந்துவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், 9 மணிக்கு பின் வருபவர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றார். காலை 9.00 முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற்றாலும், 12.45 வரை தேர்வர்கள் தேர்வறையிலேயே இருக்க வேண்டும் என்றும் பாலச்சந்தர் கூறினார். குரூப் 2, 2ஏ தேர்வுக்கு ஆண்கள் 4,லட்சத்து 96 ஆயிரம் 247 பேரும், பெண்கள் 6 லட்சத்து ,81 ஆயிரத்து 880 பேர் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்த பாலச்சந்தர், சென்ற ஆண்டுகளை விட 2 லட்சம் கூடுதலாக என்றார்.

அதிகபட்சமாக சென்னையில் 7 மையங்களில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 843 பேர் தேர்வு எழுத உள்ளனர். குறைந்த பட்சமாக நீலகிரியில் 3 மையங்களில் 5 ஆயிரத்து 624 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர். 38 மாவட்டங்களில் 117 தேர்வு மையங்களில் 58 ஆயிரத்து 900 அறைகளில் தேர்வு நடைபெற உள்ளதாக அவர் கூறினார்.

முகக் கவசம் கட்டாயமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், கொரோனா பரவல் அதிகமாக இருந்தபோது விதிமுறைகள் வெளியிடப்பட்டதாகவும் தற்போது தொற்று குறைந்துள்ள நிலையில், தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முகக் கவசம் அணிந்து வந்தால் நல்லது என தெரிவித்தார். அதேவேளையில் முகக் கவசம் அணியாமல் வரும் தேர்வர்களை அனுமதிக்கக் கூடாது என எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை எனவும் பாலசந்திரன் விளக்கமளித்தார்.

Post a Comment

أحدث أقدم