நாடு முழுதும் கொரோனாவின் தாக்கத்தில் இருந்து இப்போது பல மாநிலங்கள் மீண்டு வருகிறது. கடந்த வருடம் இறுதியில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்ததை அடுத்து கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு வழக்கம்போல இயங்கி வந்தன.
அதுமட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன் கல்வி ஆண்டு தாமதமாக திறக்கப்பட்டதால் மே மாதம் வரை வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியது.

அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பள்ளிகளில் மே 14ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் தற்போது தான் மாணவர்கள் பள்ளிக்கு வழக்கம்போல் வந்து இருப்பதால் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருசில கோரிக்கைகளை கல்வித்துறையிடம் முன்வைத்தனர். இதையடுத்து தற்போது கோடை விடுமுறையில் மாற்றம் அறிவித்து கல்வித்துறை புது உத்தரவை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த மாநில கல்வியமைச்சர் குர்மீத்சிங் மீட் ஹேயர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து அரசு மற்றும் அரசுஉதவி பெறும் தனியார் பள்ளிகளில் மே 15 -மே 31 ஆம் தேதி வரை ஆப்லைன் முறையில் வகுப்புகள் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார். மே 15-மே 31 ஆம் தேதி வரை தொடக்கப்பள்ளி நேரம் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் காலை 7 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும் இயங்கும் என தெரிவித்துள்ள அவர், ஜூன் 1 -ஜூன் 30 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து வந்த கோரிக்கையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

أحدث أقدم