தமிழகத்தில் 3,000 உபரி பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கி பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 01.08.2021 தேதியன்று அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கையில் அதிகம் இருந்தனர். இந்த தேவைகளின் அடிப்படையில் கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு தேவையுள்ள பள்ளிகளுக்கு இயக்குநரின் பொதுத் தொகுப்பிலிருந்து 3000 உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3000 ஆசிரியர்களுக்கு மேலும் 1 வருடம் பணியை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு விடுத்துள்ளது.
நடப்பாண்டில் மீண்டும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஆசிரியர்களின் பணிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அத்துடன் ,3000 ஆசிரியர்களுக்குரிய ஊதியம்,மற்றும் இதர படிகளை வழங்கிடவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
إرسال تعليق