தமிழகத்தில் மிகவும் பொருளாதாரத்தில் நலிந்த,ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கலாம் என்ற திட்டம் தமிழக அரசால் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்திட்டத்தின் மூலம் சேரக்கூடிய குழந்தைகள் எல்.கே.ஜி முதல் 8-ஆம் வகுப்பு வரை இலவச கல்வி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வருகின்ற 2022- 2023-ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைகான கால அவகாசம் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் 1.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 1.10 லட்சம் இடங்களில் சேர 1.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்றும், பெற்றோர்கள் முன்னிலையில் குலுக்கல் முறை தேர்வு 30ஆம் தேதி நடைபெறும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
Post a Comment