தமிழக அரசு துறைகளில் காலியாகவுள்ள இடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுகிறார்கள்.
கொரோனா காரணமாக சென்ற 2 வருடங்களாக தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து தற்போது சென்ற 2 வருடங்களுக்கு பின் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான காலஅட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி குரூப் 2 தேர்வு வரும் மே 21ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு வாயிலாக 5529 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. அதன்பின் குரூப் 4 மற்றும் VAO தேர்வு வரும் ஜூலை 24ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது.

இந்த தேர்வு வாயிலாக 7,382 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் குரூப்-4 தேர்வு ஒரே ஒரு நிலைகொண்ட தேர்வு என்பதாலும், இந்த தேர்வுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் என்பதாலும் பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகிகொண்டு வருகின்றனர். இத்தேர்வு மொத்தம் 200 வினாக்கள் கொண்டதாக இருக்கிறது. இதில் வினா ஒன்றிற்கு 1.5 மதிப்பெண்கள் என்று மொத்தம் 300மதிப்பெண்களுக்கு இந்த தேர்வானது நடைபெறுகிறது. அனைத்து வினாக்களுமே கொள்குறி அடிப்படையில் மட்டுமே கேட்கப்படுகிறது.

டிஎன்பிஎஸ்சி-யின் அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழித் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இதில் தமிழ் மொழிப் பாடப்பிரிவிலிருந்து கேட்கப்படும் 100 வினாக்களில் 40 மதிப்பெண்கள் பெற்றால்தான் அடுத்த பகுதி திருத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து இத்தேர்வுக்கு தற்போது பாடத்திட்டம் மாற்றப்பட்டு இருக்கிறது

Post a Comment

أحدث أقدم