இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Gramin Dak Sevaks பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதற்கு என 4310 காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 18க்கு மேல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு முன் அனுபவம் ஏதும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் பணிக்கு கல்வித்தகுதியாக அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையத்தில் விண்ணப்பதாரர்கள் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.
Gramin Dak Sevaks (GDS) பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு Pay Matrix Level 1 - Level 2 as per 7th CPC என்கிற மத்திய அரசு ஊதிய அளவின்படி, மாத ஊதியம் அளிக்கப்படும். பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் (Merit List) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள், அதன் பின் சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) நடைபெறும் என்றும் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
விண்ணப்ப கட்டணமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும். கீழே கொடுக்கப்பட்ட இணையதள இணைப்பை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் பணி தொடர்பான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.
Post a Comment