தமிழக பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு கடந்த 14ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து விடுமுறை முடிந்து வருகிற ஜூன் மாதம் 13ம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
மேலும் அரசு பள்ளியில் பயிலும் மாணவ& மாணவிகளுக்கு இனி காலையில் சத்தான சிற்றுண்டி அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 7ம் தேதி சட்டசபையில் 110வது விதியின் கீழ் அறிவித்திருந்தார். இதனால் அதற்கான நேர ஒதுக்கீடும் பின்னர் தெரிவிக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி, வருகிற ஜூன் 4-ம் வாரத்தில் பள்ளிகளைத் திறக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வினாத்தாள்களை திருத்தும் பணி, ஆசிரியர்களுக்கான பயிற்சி, காலை சிற்றுண்டி திட்டத்திற்கான முன்னேற்பாடுகள், பள்ளிகளை சீரமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஜூன் 4-வது பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் பள்ளிகல்வித்துறை சார்பில் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
إرسال تعليق