அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் 5ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு 'எண்ணும் எழுத்தும்' என்ற திட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில், வரும், 2025ம் ஆண்டுக்குள், 8 வயதுக்கு உட்பட்ட அனைத்து மாணவர்களும் அந்தந்த வகுப்பு அளவில் படிக்கவும், எழுதவும், அடிப்படை கணக்குகளை செய்யவும் முடியும் என்பதை உறுதி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
அதற்காக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் 5ம் வகுப்பு ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு 'எண்ணும் எழுத்தும்' என்ற திட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இந்த பயிற்சியானது, 12 கட்டங்களாக, 'வீடியோ' மற்றும் 'ஆன்லைன்' வழி மதிப்பீடாகவும் நடத்தப்படுகிறது.நேற்று, 4, 5, 6 ஆகிய கட்டங்களுக்கான பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதில், உடுமலை கல்வி மாவட்ட பள்ளி ஆசிரியர்கள், ஆர்வமுடன் பங்கேற்றனர். இப்பயிற்சியானது, மார்ச் 25ம் தேதி வரை நடத்தப்படுவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Topic-எண்ணும் எழுத்தும் கட்டகம் 6 வினா விடைகள் 
File Type-PDF

EE MODULE 6 TENTATIVE ANSWER

Post a Comment

Previous Post Next Post