இந்திய அஞ்சல் பேமெண்ட்ஸ் வங்கியில் காலியாக உள்ள 650 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வளெியாகியுள்ளது.
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் மே 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.
இந்தியா அஞ்சல் துறையில் உள்ள ஆர்டி, எப்டி, செல்வமகள், மாதந்திர வருமானத் திட்டம், அஞ்சலக சேமிப்புக் கணக்கு போன்ற பல்வேறு சேவைகளுக்கானப் பணத்தை நேரடியாக தான் அஞ்சலகத்திற்கு சென்று செலுத்தி வந்தோம். இதனால் பெரும்பாலான மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்த சூழலில் தான், இந்தியா முழுவதும் அனைத்து சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்க அரசு முயற்சித்துவரும் நிலையில் அஞ்சலகத்திற்கு கட்ட வேண்டியுள்ள தொகையை இந்திய அஞ்சல் பேமெண்ட்ஸ் வங்கி நிறுவனத்தின்( IPPB - Indian post payment bank) மூலம் கட்டிக்கொள்ளலாம் என்ற நடைமுறை உள்ளது. இந்நிலையில் தான் இதில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. எனவே இதற்கானத் தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.
இந்திய அஞ்சல் பேமெண்ட்ஸ் வங்கி நிறுவனத்தில் எக்ஸிகியூடிவ் பணிக்கானத் தகுதிகள்:மொத்த காலிப்பணியிடங்கள் – 650
கல்வித்தகுதி - விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்விநிலையத்தில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு - 25 வயதிற்குள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், https://www.ippbonline.com/web/ippb/current-openings என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் வருகின்ற மே 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750 விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயம்.
தேர்வு செய்யும் முறை- கல்வித்தகுதி மற்றும்தேர்வின் வாயிலாக தகுதிவாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
إرسال تعليق