சென்னை : தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பகுதிநேர சுகாதாரப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மாவட்டந்தோறும் இந்த துறையின் கீழ் உள்ள விடுதிகளில் காலியாக உள்ள சுகாதாரப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

2022ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அண்மையில் வெளியிட்டது.

அதன்படி தமிழகமெங்கிலும் காலியாக உள்ள 175 பகுதி நேர சுகாதாரப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு திறமையும், தகுதியும் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பத்தை மே 30ஆம் தேதிக்குள்ளாக தொடர்புடைய அலுவலக முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

பணி நியமனம் செய்வதற்கான அறிவிக்கை மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கப் பெறுகிறது. காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன்பாக விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்வித் தகுதி, வயது வரம்பு, அனுபவம் மற்றும் இதர தகுதிகளை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

பணி நியமன நடவடிக்கை நேர்காணல் அடிப்படையில் நடைபெறும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பல்வேறு மாவட்டங்களில் உள்ள விடுதிகளில் நியமிக்கப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடத்தி, அதன் அடிப்படையில் வேலை வழங்கப்படும்.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையில் நியமிக்கப்படும் பகுதி நேர சுகாதாரப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கோயம்புத்தூர் - 13, கிருஷ்ணகிரி - 34, சிவகங்கை - 36, பெரம்பலூர் - 11, நாகப்பட்டினம் - 14, தருமபுரி - 04, திருவள்ளூர் - 18, கடலூர் - 19, அரியலூர் - 11, புதுக்கோட்டை - 15 என்ற எண்ணிகையில் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தொடர்புடைய மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இணையதள பக்கத்தில் பணி நியமனம் தொடர்பான விளம்பரத்தில் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து நிரப்பி, பின்னர், கடைசி தேதி நிறைவடைவதற்கு முன்பாக, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Post a Comment

Previous Post Next Post