வரும் வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசுப் பணிகள், குறித்த முழுவிவரங்களை இங்கே காணலாம். வேலைவாய்ப்பு: 1. டெல்லி காவல்துறையின் தலைமை காவலர் பதவி: டெல்லி காவல்துறையின் தலைமை காவலர் பதவிகளுக்கான (Head Constable) ஆட்சேர்ப்பு அறிவிப்பு வரும் 17ம் தேதி வெளியாகிறது.
காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை குறித்த விபரங்கள் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பில் ( ஆட்சேர்ப்பு அறிவிப்பில்) தெளிவாகக் கொடுக்கப்படும்.

2. ஓஎன்ஜிசி 3,614 பணியிடங்களுக்கான காலக்கெடு நீட்டிப்பு: இந்தியாவின் பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனமான ஓஎன்ஜிசி நிறுவனத்தில் கணினி நிர்வாகி, எலக்ட்ரீசியன், கணக்கு நிர்வாகி, மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 3,614 பயிற்சியாளர்களுக்கான (அப்ரெண்டிஸ்) ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை வரும் 22ம் தேதியுடன் முடிவடைகிறது.

3. இந்திய ரயில்வே துறையில் 1,033 தொழிற் பழகுனர் பணி:

எந்தவித போட்டித் தேர்வுமின்றி 1,033 தொழிற் பழகுனர்களை இந்திய ரயில்வேத் துறை பணியமர்த்த உள்ளது. ரயில்வே நிறுவனங்களில் பழகுனர் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு , குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள், மருத்துவ தரத்துக்கு உட்பட்டு, பணிநியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

ஆன்லைன் மூலமாக 24.05.2022 வரை விண்ணப்பங்களை அனுப்பலாம். விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்களை அறிவதற்கான இணையதளம் secr.indianrailways.gov.in.

4. SSC Phase-X/2022/Selection Post: இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகள்/அமைப்புகளில் 337 பிரிவுகளில் காலியாக உள்ள 2,065 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) வெளியிட்டுள்ளது.

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 12.05.2022 முதல் 13.06.2022 முதல், (நள்ளிரவு மணி 11.00 வரை) விண்ணப்பிக்கலாம். 15.06.2022 ( நள்ளிரவு 11.00 மணி வரை) ஆன்லைனில் விண்ணப்பிக் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாளாகும். விண்ணப்பங்களில், திருத்தங்களை மேற்கொள்வதற்கு 20.06.2022 முதல் 24.06.2022 வரை கால அவகாசம் கொடுக்கப்படும்.

5. தமிழ்நாடு சுகாதாரத் துறை:

2022ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அண்மையில் வெளியிட்டது. அதன்படி தமிழகமெங்கிலும் காலியாக உள்ள 175 பகுதி நேர சுகாதாரப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு திறமையும், தகுதியும் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பத்தை மே 30ஆம் தேதிக்குள்ளாக தொடர்புடைய அலுவலக முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

6 . இந்து அறநிலைத் துறையில் பணி: இரண்டு முக்கிய ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்து அறநிலைத் துறை வெளியிட்டுள்ளது.

பழனி தண்டபாணி சுவாமி திருக்கோயிலில் மனநல மருத்துவர், மருத்துவ அலுவலர், செவிலியர், தொழிற் பயிற்சியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதார் இந்து மதத்தை சார்ந்தவராகவும். தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்கவேண்டும். 06.06.2022 தேதி மாலை 5.45 மணிக்கு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டும் .

மேலும், விபரங்களுக்கு பழனி திருக்கோயிலில் வேலை: இந்து அறநிலையத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இரண்டாவதாக, கிருஷ்ணகிரி இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

7. இந்தியன் ஆயுள் நிறுவனத்தில் 1,60,000 சம்பளத்தில் பொறியாளர் வேலை

பொறியாளர் மற்றும் பட்டதாரி பொறியாளர்கள் அப்ரெண்டிஸ் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுளளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2022, மே 22

8. இந்திய அஞ்சல் துறையில் 38,926 கிராம அஞ்சல் பணியாளர் காலியிடங்கள்:

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 38,926 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள தேர்வர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

தற்போது, ஆன்லைன் மூலம் விண்ணப்பபங்கள் பெறப்பட்டு வருகின்றன. இணையதளம் மூலம் விண்ணப்பபங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூன் 5 ஆகும்.

கல்வித்தகுதி: குறைந்தபட்ச பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கட்டாயமாக விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழியறிவு கொண்டிருக்க வேண்டும். அதேபோன்று, மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும்.

வேண்டுகோள்:

கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர், விண்ணப்பிக்கும்போது, இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களோ எழவாய்ப்புள்ளது. எனவே, விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே, போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post