1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு முழு ஆண்டுத்தேர்வு மே 13-ம் தேதியுடன் முடிவடைந்து மே 14 முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஜுன் 10 முதல் 17-ம் தேதி வரை துவங்கி நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதேபோல, ஜுன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிப்புகள் வெளியாகி இருந்தது. ஆனால், 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்பதால், ஜுன் 10 முதல் 12-ம் தேதி வரை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மே மாதம் 14ம் தேதி முதல் விடுமுறையும், தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும் 20-ம் தேதி முதல் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் திறப்பு தாமதமாகலாம் என்கிறார்கள்.
இந்நிலையில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27-ம் தேதியும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.
மேலும், அடுத்த ஆண்டு மார்ச் 13-ம் தேதி, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வும், மார்ச் 14-ம் தேதி 11-ம் வகுப்பு பொதுத்தேர்வும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 3-ம் தேதி தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
إرسال تعليق