தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டது. தற்போது 1 முதல் 9 மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
10 மற்றும் 12 11ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அடுத்த கல்வியாண்டிற்கான தேதி மற்றும் பொதுத் தேர்வு குறித்த அறிவிப்புகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வருடம் பொதுத் தேர்வு கட்டாயமான முறையில் நடத்தப்படும் என்றும் அறிவுறுத்தியது.

அதனால் பொதுத்தேர்வுக்கானபாடங்களை முடிப்பதற்கு சனிக்கிழமைகளில் கூட வகுப்புகள் நடைபெற்றது. இதனால் மாணவர்கள் கூடுதல் மனசுமையை சந்தித்தனர். இந்த நிலையில் அடுத்த கல்வி ஆண்டு ஜூன் -13 தொடங்கப்பட உள்ளதையடுத்து இதனை தவிர்ப்பதற்காக சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post