தமிழகத்தில் கொரொனா 3 வது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புக்கள் நடத்தப்பட்டு வந்தன.
செமஸ்டர் தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டு அதன்படி நடைபெற்று வருகின்றன. கோடை வெயில் அதிகம் இருப்பதால் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடுத்த படியாக தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்படும் என்று உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான எனவே மாணவர்கள் பங்கேற்பதற்கு வசதியாக அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டான்செட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதள பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி தேர்வு எழுதும் மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள் என்று உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.
Post a Comment