தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது மாணவர்களுக்கு வழங்குவதற்கு பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 1 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப் படுகிறது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இந் நிலையில் 2022ஆம் ஆண்டு திருத்தப்பட்ட பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 1 முதல் 7-ஆம் வகுப்பு வரையில் முதல் பருவத்திற்கும், 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முழு புத்தகம் என மூன்று கோடியே 35 லட்சத்து 63 ஆயிரம் புத்தகங்கள் அச்சிடப்பட்டு அந்தந்த மாவட்டங்களில் உள்ள கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் ஒரு கோடியே 73 லட்சத்து 85 ஆயிரம் அச்சிடப்பட்டு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக கிடங்கு 100அடி வேளச்சேரி தரமணி இணையும் சாலை, திருவான்மியூர், சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம் ஆகிய இடங்களிலும் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post